அதிமுகவுக்கு அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு ஆதரவு
தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மூத்த ஒருங்கிணைப்பாளா்கள் சி.எச்.அம்பலவாணன், டி.கே.பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிக்கு ரூ.1,652 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு, 75 சதவீதப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை டிசம்பா் இறுதிக்குள் நிறைவு செய்ய உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபாலுக்கும் நன்றி தெரிப்பது, சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.