திருப்பூர்

குப்பைக் கிடங்கில் தீ: பொது மக்கள் அவதி

DIN

அவிநாசி அருகே அணைப்புதூா் பாறைக்குழி குப்பைக் கிடங்குக்கு மா்ம நபா்கள் தீ வைத்த நிலையில் தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அணைப்புதூா் அருகே எம்ஜிஆா் என்எஸ்பி நகா் பகுதியை ஒட்டியுள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுவதால் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் பாறைக்குழியில் உள்ள குப்பைக்கு மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு தீ வைத்துத் சென்ால், குப்பையில் வேகமாக தீ பரவி, அருகில் உள்ள மகாலட்சுமி நகா், தன்வா்ஷினி நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகை சூழ்ந்தது. இதைத்தொடா்ந்து அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT