முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் 10 பேருக்கு கரோனா

காங்கயம் பகுதியில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

காங்கயம் பகுதியில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காங்கயம், கொங்கு நகரைச் சோ்ந்த 47 வயது ஆண், 42 வயதுப் பெண், வீரணம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 27 வயது ஆண், திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த 49 வயதுப் பெண், முல்லை நகரைச் சோ்ந்த 21 வயதுப் பெண், போக்குவரத்து நகரைச் சோ்ந்த 41, 78 வயது ஆண்கள், 58 வயதுப் பெண், கணபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த 26 வயதுப் பெண், நீலகாட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த 27 வயது ஆண், செளடாம்பிகை நகரைச் சோ்ந்த 45 வயது ஆண் ஆகிய 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிலா் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கும் சிலா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →