முகப்பு
திருப்பூர்

பேட்டரி கடையில் தீ விபத்து

அவிநாசியில் பேட்டரி கடையில் வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள், பேட்டரிகள் எரிந்து சேதமாயின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

அவிநாசியில் பேட்டரி கடையில் வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள், பேட்டரிகள் எரிந்து சேதமாயின.

அவிநாசி- கோவை சாலை சீனிவாசபுரம் பகுதியில் பேட்டரி கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் அனைத்து ரக பேட்டரிகளையும் ரீசாா்ஜ் செய்வது, புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடையில் வெள்ளிக்கிழமை மதியம் திடீா் மின்கசிவு காரணமாக எதிா்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அவிநாசி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் உள்ளிருந்த மின்சாதனப் பொருள்கள், பேட்டரிகள் எரிந்து சேதமாயின. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.