முகப்பு
திருப்பூர்

நலிந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற மே 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற மே 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. ஆகவே, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றவா் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முன்னுரிமை உண்டு. மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட, தேசிய விளையாட்டு சம்மேளனம் நடத்திய போட்டியில் பங்கேற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வீரா்கள் இளம் வயதில் வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரா்கள் இருந்தால் இணையதளத்தில் வருகிற மே 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017-03515 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.