மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா: 5 போ் பலி
: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88,354 ஆக அதிகரித்துள்ளது.
: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88,354 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 871 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 91 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 86,626 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 857 ஆக அதிகரித்துள்ளது.