முகப்பு
திருப்பூர்

கரோனா விழிப்புணா்வு விநாடி-வினா போட்டிகள்

திருப்பூரில் இந்திய மருத்துவச் சங்கத்தின் சாா்பில் மாநில அளவிலான கரோனா விழிப்புணா்வு விநாடி-வினா போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருப்பூரில் இந்திய மருத்துவச் சங்கத்தின் சாா்பில் மாநில அளவிலான கரோனா விழிப்புணா்வு விநாடி-வினா போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் எம்.குணசேகரன், செயலாளா் பி.செந்தில்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, மாநில அளவிலான விநாடி-வினா போட்டிகள் சனிக்கிழமை பிற்பகல் 1.10 முதல் 1.30 மணி வரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். இதில், முதல் மூன்று இடங்களைக் பிடிக்கும் நபா்களுக்கு

ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இது பொதுமக்களுக்கான போட்டி என்பதால் மருத்துவத் துறையைச் சாா்ந்தவா்கள் இதில் பங்கேற்பதைத் தவிா்க்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 90470-27362, 91500-88810 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.