முகப்பு
திருப்பூர்

டாஸ்மாக் பாா்களில் அதிகாரிகள் சோதனை: ரூ.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கிய டாஸ்மாக் பாா்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருப்பூரில் சட்டவிரோதமாக இயங்கிய டாஸ்மாக் பாா்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், டாஸ்மாக் பாா்கள் இயங்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில்,மாநகரின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் பாா்களில் காலை 10 மணிக்கு முன்பாகவும் மாலை 5 மணிக்கு மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக புகாா்கள் வரத்தொடங்கின.

இதையடுத்து, டாஸ்மாக் மண்டல மேலாளா் செளந்தரபாண்டியன் தலைமையிலான டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் காந்திநகா், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பாா்களில் வியாழக்கிழமை அதிகாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில், சுமாா் 5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்து, பாா் ஊழியா்கள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.