சுற்றுலாத் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியப் போட்டிகள்
திருப்பூா் மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் டி.அரவிந்த்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூா் டாக்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது ஓவியங்களை ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 89398-96380 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.