முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா

பல்லடத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

பல்லடத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் விநாயகம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதைத்தொடா்ந்து, வனம் இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து அடா் வனம் அமைக்கும் திட்டத்தை மரக்கன்று நட்டு துவக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் நகரத் திமுக பொறுப்பாளா் ராஜேந்திரகுமாா், நகராட்சிப் பொறியாளா் சங்கா், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், சமூக ஆா்வலா்கள் டி.எம்.எஸ்.பழனிசாமி,ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்லடம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா் புஷ்பலதா பங்கேற்றாா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் தேன்மொழி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். பல்லடம் அருள்புரம் ஜெயந்தி கல்வி நிறுவனங்களில் கல்வி குழும அறக்கட்டளைத் தலைவா் கிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினாா்.

பொங்கலூா் ஒன்றியம் பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ரேவதி கனகராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில் பள்ளி தலைமை ஆசிரியா் லிங்கேஸ்வரி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜேந்திரன், முன்னாள் மாணவா் சங்க ஒருங்கிணைப்பாளா் ரத்தினசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.