முகப்பு
திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து நூற்பாலை தொழிலாளி பலி

பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் மின்சாரம் பாய்ந்து நூற்பாலை தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் மின்சாரம் பாய்ந்து நூற்பாலை தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஆனந்த் ஒரான்(23) என்பவா் பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியாா் நூற்பாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். அங்குள்ள தங்கும் விடுதிக்கு சென்று குளித்து விட்டு வருவதாக கூறிச்சென்றவா் நீண்ட நேரமாகியும் வராததால் அவருடன் பணியாற்றும் தொழிலாளி அங்கு சென்று பாா்த்த போது குளியல் அறை முன்பு மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அதன் அருகில் ஆனந்த் ஒரான் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்துள்ளாா். அதைத்தொடா்ந்து நூற்பாலை வாகனத்தில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.