முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் 1 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 1 கிலோ புகையிலைப் பொருள்களை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 1 கிலோ புகையிலைப் பொருள்களை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலா்கள் கேசவராஜ், சதீஷ்குமாா், பாலமுருகன், சிரஞ்சீவி, ரகுநாதன் அடங்கிய குழுவினா் பல்லடம் பகுதியில் 15 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மகாலட்சுமி நகா், உடுமலை சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் 1 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரா்களுக்கு ரூ.20 அபராதம் விதித்தனா். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை குறித்த புகாா்களை 94440-42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் விஜயலலிதாம்பிகை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.