திருப்பூர்: மது அருந்தி விட்டு தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை குத்திக் கொலை செய்த மகன்
திருப்பூரில் குடிபோதையில் தாயை அடித்து கொடுமைப்படுத்திய தந்தையை 15 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் குடிபோதையில் தாயை அடித்து கொடுமைப்படுத்திய தந்தையை 15 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் அவிநாசி ரோடு, பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (45). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கேண்டீன் வைத்து நடத்தி வருகிறார். குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்துவிட்டு, மனைவியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, அடித்து, உதைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மகனான 15 வயது சிறுவன் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் வயில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க- ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்: புதிய வீரரைத் தேர்வு செய்த ஆர்சிபி அணி!
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தியேலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 15 வயது சிறுவன் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் திருப்பூரில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.