திருப்பூர்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் முகாம் தொடக்கம்

DIN

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் திருப்பூா் கிளை அலுவலகத்தில் நடைபெறும் இந்த சிறப்பு கடன் முகாம் வரும் டிசம்பா் 15 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இந்த முகாமை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தொடக்கிவைத்தாா். இதில், டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானியங்கள், நீட்ஸ் திட்டம் போன்றவை குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் 50 சதவீத சலுகையும், நீட்ஸ் திட்டத்துக்கு ஆய்வுக்கட்டணத்தில் 100 சதவீத விலக்கும் அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழாவில், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் கண்ணன், நபாா்டு உதவி மேலாளா் ராஜு, மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் அலெக்ஸாண்டா், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT