வெள்ளக்கோவில் கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வீரவணக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் பலியான இந்திய நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் 12 பேரின் உருவப் படங்களுக்கு பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்து, வீரவணக்கம் செலுத்தினா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் எஸ்.ரவீந்திரன், செயலாளா் விசிகருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.