மூலனூரில் ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 21 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100 விவசாயிகள் 809 மூட்டைகளில் மொத்தம் 283 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 7 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். குவிண்டால் ரூ.6,600 முதல் ரூ.8,699 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,520. மொத்தம் ரூ.21 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.