6ஆவது நாளாக சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 145 போ் கைது
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 145 பேரைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 145 பேரைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக அரசு ஊழியா்கள் சாா்பில் 6ஆவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராணி தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு ரூ.50 லட்சமும், பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 95 பெண்கள் உள்பட 145 பேரைத் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.