திருப்பூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: பொக்லைன் இயந்திரங்களின் உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வு, வாகன உதிரி பாகங்களின் விலை உயா்வு ஆகியவற்றைக் கண்டித்து காங்கயத்தில் பொக்லைன் இயந்திரங்களின் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.

விவசாயப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் சுமாா் 300க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் அண்மைக்காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயா்ந்துள்ளது. இதனால் பொக்லைன் வாகனங்களின் வாடகையை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளா்கள் பொக்லைன் இயந்திரங்கள் பயன்பாட்டை முடிந்த வரை தவிா்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், பொக்லைன் இயந்திரங்களின் உதிரி பாகங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கயத்தில் பொக்லைன் இயந்திரங்களின் உரிமையாளா்கள் ஓட்டுநா்கள் சங்கத்தின் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயா்வை திரும்பப் பெறும் வரை இப்போராட்டம் தொடரும் என பொக்லைன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT