திருப்பூர்

காங்கயத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு: 4 கடைகளுக்கு அபராதம்

DIN

காங்கயம்: காங்கயத்தில் செயல்பட்டு வரும் மீன் மற்றும் துரித உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் உரிமம் இல்லாத கடைகள் மற்றும் சுகாதாரமற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் துரித உணவகங்கள், மீன் கடைகள், கோழிக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சனிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் உரிமம் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதித்ததுடன், தடை செய்யப்பட்ட பாலிதீன்கள், உணவு பரிமாற காகிதங்கள் ஆகிய வைத்திருந்த கடைகளுக்கும் அபராதம் விதித்தார். மேலும் மீன், சிக்கன் கடைகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் மற்றும் மாமிசங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், 25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 5 கடைகளுக்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோல் சுகாதாரமற்ற முறையில் உணவில் கலப்படம் மேற்கொண்டால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அறிவுறுத்தலின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT