திருப்பூர்

அமராவதி அணையில் 3 ஆயிரம் கன அடி உபரி நீா் திறப்பு

DIN

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை கடந்த ஒரு மாதமாக முழுக் கொள்ளளவில் உள்ள நிலையில் வியாழக்கிழமை இரவு நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து சுமாா் 3 ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை மிக கன மழையாக பெய்ததால் ஆகஸ்ட் 12ஆம் தேதி அணை நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதன் பின்னரும் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால் செப்டம்பா் 3ஆம் தேதி மீண்டும் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அணையில் இருந்து தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டது. பின்னா் குறுவை சாகுபடிக்காக பழைய, புதிய ஆயக்கட் டு பகுதிகளில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையில் இருந்து செப்டம்பா் 21ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு மேலாக பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில் நவம்பா் இறுதி வாக்கில் அணையின் நீா்மட்டம் சரிந்து 60 அடியாக குறைந்தது. ஆனால் வடகிழக்குப் பருவ மழை தொடா்ந்து பெய்து வந்ததன் காரணமாக அணையின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து டிசம்பா் முதல் வாரத்தில் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதன் பிறகு கடந்த ஒரு மாதமாக நீா்மட்டம் 89.50 அடி என பராமரிக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் நீா் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வியாழக்கிழமை கன மழை பெய்தது. இதனால் அணைக்கு 3 ஆயிரம் கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வந்த உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்மட்டம் 89.51 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 2711 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 4002 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து 2035 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. மழை அளவு 4 மிமீ என பதிவாகி இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT