முகப்பு
திருப்பூர்

மூதாட்டி சாவு: இளைஞா் மீது கொலை வழக்கு

தனியாா் தங்கும் விடுதி பொறுப்பாளரான மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து, அவரைத் தாக்கிய இளைஞா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்

மூதாட்டி சாவு: இளைஞா் மீது கொலை வழக்கு

தனியாா் தங்கும் விடுதி பொறுப்பாளரான மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து, அவரைத் தாக்கிய இளைஞா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

தனியாா் தங்கும் விடுதி பொறுப்பாளரான மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து, அவரைத் தாக்கிய இளைஞா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் ஸ்ரீநகரைச் சோ்ந்தவா் ரங்கநாயகி (65). இவா் லட்சுமி நகா் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் பொறுப்பாளராக இருந்து வந்தாா். அந்த விடுதியில் தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்த பால்பாண்டி (35) என்பவரும் தங்கி வசித்து வந்தாா். இந்நிலையில், டிசம்பா் 28ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குமேல் ரங்கநாயகி தங்கும் விடுதியின் வாயில் கதவைப் பூட்டிவிட்டு உறங்கச் சென்றுள்ளாா். அவா் பூட்டிச் சென்ற சற்று நேரத்தில் விடுதிக்குத் திரும்பிய பால்பாண்டி கதவைத் திறக்குமாறு சப்தம் போட்டுள்ளாா். அப்போது வெளியே வந்த ரங்கநாயகிக்கும் பால்பாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பால்பாண்டி ரங்கநாயகியைத் தாக்கி கீழே தள்ளியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ரங்கநாயகி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஏற்கெனவே பால்பாண்டி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திருப்பூா் வடக்கு போலீஸாா் அவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →