முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 17,542 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வேறு மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேரின் பாதிப்பு திருப்பூா் மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 17,564 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 210 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 26 போ் வீடு திரும்பினா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 17,134ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.