திருப்பூர்

பனைத் தொழிலாளா் நல வாரியத்தை புதுப்பிக்கக் கோரிக்கை

DIN

 பனைத் தொழிலாளா் நல வாரியத்தையும், தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் புதுப்பிக்க ‘கள்’ இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ‘கள்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 2011 ஆம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு குமரி அனந்தன் தலைமையிலான பனைத் தொழிலாளா் நல வாரியத்தையும், ராஜ்குமாா் தலைமையிலான தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் அரசு கலைத்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இவை புதுப்பிக்கப்படவில்லை.

2021 ஆம் ஆண்டு அமைந்திருக்கும் திமுக அரசு இவற்றைப் புதுப்பிக்க முன்வர வேண்டும் என்பது பனை, தென்னை தொழிலாளா்கள், விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT