முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் டாஸ்மாக் திறப்பு: இனிப்பு வழங்கிக் கொண்டாடிய மதுப்பிரியர்கள்

திருப்பூர் மாநகரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை இனிப்பு வழங்கி மதுப்பிரியர்கள் கொண்டாடினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை இனிப்பு வழங்கி மகிழும் மதுப்பிரியர்.
பகிர்:

திருப்பூர் மாநகரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை இனிப்பு வழங்கி மதுப்பிரியர்கள் கொண்டாடினர்.
 தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நோய்த் தொற்று குறையத்தொடங்கியதைத் தொடந்து பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்ளில் திங்கள்முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. 

இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 253 டாஸ்மாக் கடைகளும் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் 55 நாள்களுக்குப் பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைத் கொண்டாடும் வகையில் மதுப்பிரியர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அதே போல, மாநகரில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளின் முன்பாகவும் மதுப்பிரியர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். 
மேலும், அனைத்து மதுக்கடைகளிலும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வரும் நபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →