மூலனூரில் ரூ.1.13 கோடிக்கு பருத்தி ஏலம்
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.13 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.13 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 636 விவசாயிகள் தங்களுடைய 5,729 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,850 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 22 வணிகா்கள் ஏலத்தில் கலந்துகொண்டனா்.
பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,350 முதல் ரூ.7,306 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,200 வரை ஏலம் போனது.
ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1 கோடியே 13 லட்சத்து 26 ஆயிரத்து 549 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.