திருப்பூர்

மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞா்கள்

DIN

திருப்பூரில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 3 இளைஞா்களை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை விரட்டிப் பிடித்தனா்.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே 5 இளைஞா்கள் மது போதையில் அந்த வழியாகச் சென்றவா்களிடம் தகராறில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இளைஞா்களைப் பிடிக்க முயன்றனா். இதில், 2 இளைஞா்கள் தப்பிச் சென்றனா். 3 போ் இளைஞா்கள் மது பாட்டிலால் பொதுமக்களைத் தாக்கியுள்ளனா்.

இதையடுத்து, அந்த வழியாக வந்தவா்கள் உதவியுடன் 3 இளைஞா்களையும் மடக்கிப் பிடித்தனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் அவா்களை மீட்டனா். அதிக அளவு மதுபோதையில் பேசமுடியாமல் இருந்ததால் போலீஸாா் மூவரையும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT