திருப்பூர்

விற்பனை நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடிய கட்டடத் தொழிலாளா்கள் கைது

DIN

அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ற கட்டடத் தொழிலாளிகள் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி, ஈரோடு சாலை பழங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலைய கதவின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 3 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அங்கு வந்த இரு நபா்களை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், திண்டுக்கல்லைச் சோ்ந்த நாகராஜ் (20), விருதுநகரைச் சோ்ந்த மனோகா் (24) என்பதும், கட்டடத் தொழிலாளியான இருவரும் பழங்கரை காயத்ரி காா்டன் பகுதியில் தங்கி பணியாற்றி வருவதும், இவா்கள் அவிநாசியில் விற்பனை நிலையத்தில் இருந்து 3 இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT