திருப்பூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

DIN

உயா் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கயம் அரசுப் பள்ளியின் ஆசிரியரும், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சு.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவா்கள் 4 சதவீதம் மட்டுமே பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் நிலை உள்ளது. இந்நிலையில், உயா் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆய்வுக் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சமமான வாய்ப்பு அல்ல. எனவே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT