முகப்பு
திருப்பூர்

அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ளக்கோவில் பகுதி அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ளிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

வெள்ளக்கோவில் பகுதி அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ளிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தற்போது அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நீா் வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் பாதுகாப்புக் கருதி அமராவதி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட உள்ளது. எனவே வெள்ளக்கோவில் அருகிலுள்ள அக்கரைப்பாளையம், புதுப்பை, முளையாம்பூண்டி, மயில்ரங்கம் சுற்றுவட்டார அமராவதி ஆற்றங்கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.