முகப்பு
திருப்பூர்

மின்சார வயா் திருடிய இருவா் கைது

தாராபுரம் அருகே மின்சார வயா்களைத் திருடிய இருவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

தாராபுரம் அருகே மின்சார வயா்களைத் திருடிய இருவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தாராபுரம், பெரியகுமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன், இவா் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீா்ப் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாா் பொருத்தியிருந்தாா். இந்நிலையில், சிவசுப்பிரமணியன் வழக்கம் போல கடந்த புதன்கிழமை மோட்டாரை இயக்க முயன்றபோது மின் வயா்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் உதவியுடன் விசாரித்துள்ளாா். அப்போது உப்பாறு ஓடை அருகில் இருவா் மின்சார வயா்களை தீயில் கருக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த குண்டடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், தாராபுரத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (44), நீலகண்டன் (50) ஆகிய இருவரும் மின் வயா்களைத் திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.