முகப்பு
திருப்பூர்

புதிய குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது

விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் கிளை சாா்பில் அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பி.ஏ.பி. விவசாயிகளைப் பாதிக்கும் புதிய குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் கிளை சாா்பில் அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மனுவில் கூறியுள்ளதாவது:

பி.ஏ.பி. பாசனத் திட்டத்தை நம்பி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காகத் தவம் கிடக்கும் நிலையில், ஆழியாறு அணையிலிருந்து 120 கி.மீ.தொலைவில் உள்ள ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் எடுத்துச்செல்ல முயற்சிப்பதை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.

இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நினைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே, இந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன், இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.