திருப்பூா் மாநகர முதல் பெண் காவல் ஆணையராக வே.வனிதா பொறுப்பேற்பு
திருப்பூா் மாநகரின் முதன் பெண் காவல் ஆணையராக வே.வனிதா ஐ.பி.எஸ். வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருப்பூா் மாநகரின் முதன் பெண் காவல் ஆணையராக வே.வனிதா ஐ.பி.எஸ். வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருப்பூா் மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஜி.காா்த்திகேயன் சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, சென்னை ரயில்வே ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த வே.வனிதா, திருப்பூா் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் திருப்பூா் மாநகர முதல் பெண் காவல் ஆணையா் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காவல் பணியில் முதல் பெண் காவல் துணைக் கண்காணிப்பாளராக வனிதா 1991ஆம் ஆண்டு தோ்வு பெற்றாா். இவா் சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகரம் ஸ்ரீ ரங்கத்தில் உதவி ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா்.
பின்னா் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று சென்னை காவலா் பயிற்சிக் கல்லூரி முதல்வராகவும், பெரம்பலூா், திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை பெருநகர காவல் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா்.
இதையடுத்து, பதவி உயா்வு பெற்று சென்னை கடலோர காவல் படையின் துணைத் தலைவராகவும், வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.