முகப்பு
திருப்பூர்

காவல் துறை சாா்பில் 44 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்

திருப்பூா் மாவட்ட காவல் துறை சாா்பில் 44 மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருப்பூா் மாவட்ட காவல் துறை சாா்பில் 44 மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் தனியாா் அறக்கட்டளையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் 44 குடும்பங்களுக்கு காவல் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், தாராபுரம் உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு தலைமையில் தாராபுரம், குண்டடம், மூலனூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 32 குடும்பங்களுக்கு 20 மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதேபோல, காங்கயம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் குமரேசன் தலைமையில் காங்கயம், ஊதியூா், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 7 குடும்பங்கள், உடுமலை உட்கோட்டத்தில் மடத்துக்குளம், கணியூா், குடிமங்கலம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 5 குடும்பங்கள் என மொத்தம் 44 மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.