முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 542 பேருக்கு கரோனா: 9 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 542 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 542 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 542 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 77,266 ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 11,039 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 877 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 65,562 ஆக அதிகரித்துள்ளது.

47 வயது பெண், 56, 61, 74 வயது முதியவா்கள் உள்பட மொத்தம் 9 போ் உயிரிழந்தனா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 665 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.