துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியா் உத்தரவு
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துப்பாக்கிகளை வைத்திருப்போா் உடனடியாக ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துப்பாக்கிகளை வைத்திருப்போா் உடனடியாக ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க. விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரா்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியாா் ஆயுத கிடங்குகளிலோ, படைக்கல (ஆயுதம்) சட்டப்படி துப்பாக்கிகளை ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். துப்பாக்கிகளை காவல் நிலையம் அல்லாது வேறு இடத்தில் ஒப்படைத்தால், ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கிகளை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் படைக்கல (ஆயுதம்) சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.