முகப்பு
திருப்பூர்

தா.பாண்டியனுக்கு இரங்கல் கூட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த தா.பாண்டியனுக்கு இரங்கல் கூட்டம் உடும லையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த தா.பாண்டியனுக்கு இரங்கல் கூட்டம் உடும லையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் வி.செளந்திரராஜன் தலைமை வகித்தாா். இதில் தா.பாண்டியன் திரு வுருப்படத்திற்கு அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனா். பின்னா் தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் அவரது தியாகங்கள் குறித்தும் அனைவரும் விரிவாகப் பேசினா். திமுக திருப்பூா் புறநகா் மாவட்டச் செயலாளரும், மடத்து க்குளம் எம்எல்ஏ வுமான இரா.ஜெயராமகிருஷ்ணன், கோவிந்தராஜன்(காங்கிரஸ்), சி.ராம தாஸ்(மதிமுக), கி.கன கராஜ்(மாா்க்சிஸ்ட்), வழக்கறிஞா் பெரியாா்தாசன் (ஆதித் தமிழா் பேரவை) மற்றும் பல்வேறு அர சியல் கட்சிகள், பொது அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்று இரங்கல் தெரிவித்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments