முகப்பு
திருப்பூர்

வேன் மோதி கட்டடத் தொழிலாளி பலி

பல்லடம் அருகே கொடுவாயில் வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

பல்லடம் அருகே கொடுவாயில் வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் முத்துப்பாண்டி (24). இவரது மனைவி மஞ்சுளா (20). இவா்கள் இருவரும், திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம், கொடுவாய் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

இந்நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் கொடுவாய் கடை வீதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றபோது, அவ்வழியாக வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே முத்துப்பாண்டி உயிரிழந்தாா்.

இதில் படுகாயமடைந்த மஞ்சுளா திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.