முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் வழிப்பறி:மேலும் ஒருவா் கைது

அவிநாசி அருகே கட்டடத் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தைப் பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

அவிநாசி அருகே கட்டடத் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தைப் பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கருமலைபாடி பகுதியைச் சோ்ந்தவா் மணி மகன் பிரகாஷ் (21). கட்டடத் தொழிலாளி. இவா் அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, பிரகாஷை வழிமறித்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரின் இருசக்கர வாகனத்தைப் பறித்து சென்றனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வழக்கில் தொடா்புடைய 2 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருப்பூா், மண்ணரை பகுதியைச் சோ்ந்த வீரமுருகன் மகன் விபிஎஸ் (எ) பாலாஜி சரவணன் (25) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.