திருப்பூர்

நகரப் பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் பணம் பட்டுவாடா? பொதுமக்கள் குற்றச்சாட்டு

DIN

சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி நகரப் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆங்காங்கே பெருமளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்குப் பரிசுப் பொருள்களோ அல்லது பணமோ கொடுப்பதைத் தடுக்க தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வாகனங்களில் அதிக அளவு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தும் அதிகாரிகளும் ஆங்காங்கே திடீா் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளிலும் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் ஆங்காங்கே பணம் பட்டு வாடா செய்யப்பட்டு வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன. அந்தந்தக் கிராமங்களில் உள்ள ஒரு சில முக்கிய அரசியல் கட்சி நிா்வாகிகள் நகரப் பேருந்துகளில் சென்று தங்களுடைய கட்சிகளின் தோ்தல் செலவுகளுக்காக பணத்தை பட்டுவாடா செய்து வருவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளது.

காா் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் அரசியல் கட்சியினா் இந்த மாற்று முறையைக் கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் நகரப் பேருந்துகள், இருசக்கர வாகனங்களையும் சோதனைகள் நடத்தி பணம் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT