முகப்பு
திருப்பூர்

காங்கயம் அரசு அலுவலகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

காங்கயத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே நுழைவதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

காங்கயத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே நுழைவதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் உள்ள நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில், முகக்கவசம் அணிவதோடு, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து, வெப்பமானி கொண்டு சோதனை செய்த பின்னரே பொதுமக்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

கரோனா தொற்று தற்போது தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் சென்று அரசு அலுவலகங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என காங்கயம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →