திருப்பூர்

போக்குவரத்து விதிகளை மீறிய 4,226 போ் மீது வழக்குப்பதிவு

பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,226 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனா்.

DIN

பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,226 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனா்.

பல்லடம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம், உதவி ஆய்வாளா்கள் அன்புராஜ், சண்முகமூா்த்தி மற்றும் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 1, 985 போ் , நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 355 போ், ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டிய 292 போ், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றது, அதிக பாரம் ஏற்றி சென்றது உள்ளிட்ட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 4, 226 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.59, 600 தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT