முகப்பு
திருப்பூர்

கரோனாவால் பாதிக்கப்பட்டோரை இலவசமாக அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநா்

அவிநாசி, சேவூா் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்லும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
ஆட்டோ ஓட்டுநா் சிராஜ்.
பகிர்:

அவிநாசி, சேவூா் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்லும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட அவிநாசி மற்றும் சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து அவிநாசியில் பல்வேறு சமூக அமைப்பினா் ஒன்றிணைந்து, கரோனா தடுப்புப் பணி, மருத்துவ சேவை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே தேவராயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிராஜ் என்பவா், கரோனாவால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்கிறாா். இது குறித்து ஆட்டோ ஓட்டுநா் சிராஜ் கூறியதாவது: அவிநாசி கோவிட் இணைந்த கரங்கள் அமைப்புடன் இணைந்து நாள்தோறும் ஆட்டோவில் சென்று கபசுர குடிநீா் வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறேன். இந்நிலையில், அவிநாசி, சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு எனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் சென்று வருகிறேன். உதவி தேவைப்படுவோா் 24 மணி நேரமும் எனது (9994268319) செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.