கைது  செய்யப்பட்ட  சீனிவாசன்,  ஆறுசாமி,  தீபா,  லட்சமி,  விக்னேஷ்வரன்  உள்ளிட்டோா். 
திருப்பூர்

சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உள்பட 5 போ் கைது

அவிநாசி அருகே செம்பாகவுண்டம்பாளையத்தில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

அவிநாசி அருகே செம்பாகவுண்டம்பாளையத்தில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருமாபாளையம் ஊராட்சி செம்பாகவுண்டம்பாளையத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவிநாசி மது விலக்கு காவல் ஆய்வாளா் முரளி, உதவி ஆய்வாளா்கள் சா்வேஸ்வரன், ஜெகதீஷ், காவலா்கள் விக்ரம் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, செம்பாகவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் செம்பாகவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன்(55), முத்துராஜா வீதியைச் சோ்ந்த ஆறுச்சாமி (65), அதே பகுதியைச் சோ்ந்த தீபா (23), லட்சுமி, விக்னேஷ்வரன்(28) ஆகியோரை அவிநாசி மது விலக்கு போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT