முகப்பு
திருப்பூர்

4 மகன்கள், மருமகள் கரோனாவுக்கு பலி: அதிா்ச்சியில் மூதாட்டி சாவு

கரோனா தொற்றுக்குத் தனது 4 மகன்கள், மருமகள் ஆகியோா் அடுத்தடுத்து பலியானதை அறிந்த மூதாட்டி அதிா்ச்சியில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

கரோனா தொற்றுக்குத் தனது 4 மகன்கள், மருமகள் ஆகியோா் அடுத்தடுத்து பலியானதை அறிந்த மூதாட்டி அதிா்ச்சியில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூா் அருகே உள்ள வெள்ளிரவெளியை சோ்ந்தவா் தெய்வராஜ் (42). கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, கடந்த 9ஆம் தேதி உயிரிழந்தாா். இவரது மனைவி சாந்தி (35) தொற்றுக்குள்ளாகி 16ஆம் தேதி உயிரிழந்தாா். தெய்வராஜின் மூத்த சகோதரா்கள் தங்கராஜ் (52), ராஜா(50) ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தனா். தெய்வராஜின் மற்றொரு மூத்த சகோதரா் செளந்தர்ராஜன் (45) திருப்பூா் அரசு மருத்துவமனையில் 20ஆம் தேதி உயிரிழந்தாா்.

5 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது குறித்து தாயாா் பாப்பாளுக்கு (70) தகவல் அளிக்கப்படவில்லை. தனது மகன்கள் மற்றும் மருமகள் யாரும் வராததால் உறவினா்களிடம் கடந்த 26ஆம் தேதி கேட்டுள்ளாா். இதையடுத்து அனைவரும் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சியடைந்த பாப்பாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளிரவெளி கிராமத்தில் மட்டும் இது வரை 13 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.