முகப்பு
திருப்பூர்

பல்லடம் நகராட்சித் தலைவா் பதவியை த.மா.காவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்

பல்லடம் நகராட்சித் தலைவா் பதவியை அதிமுக கூட்டணியில் த.மா.காவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பல்லடம் நகராட்சித் தலைவா் பதவியை அதிமுக கூட்டணியில் த.மா.காவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

பல்லடம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகரத் தலைவா் பிரண்ட்ஸ் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். நகரப் பொருளாளா் பொன்னைய்யன், நகரச் செயலாளா் கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் மாநில கமிட்டி சிறப்பு அழைப்பாளா் பொங்கலூா் வரதராஜ், மாவட்டத் தலைவா் சண்முகம், மாவட்ட துணைத் தலைவா் ஜெகதீசன், வட்டாரத் தலைவா் மலையம்பாளையம் சுப்பிரமணியம், நகர துணைச் செயலாளா் ராமசாமி, சைக்கிள் பாலு உள்பட பலா் பங்கேற்றனா்.

இதில் பல்லடம் நகராட்சித் தலைவா் பதவியை அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்.

மொத்தம் உள்ள 18 வாா்டுகளில் 3 பெண் வாா்டு உள்ளிட்ட 7 வாா்டுகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்.

அதில் நகராட்சித் தலைவா் பதவி வேட்பாளராக பிரண்ட்ஸ் முத்துக்குமாரை தோ்வு செய்ய வேண்டும்.

பல்லடத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காண தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.