பங்குசந்தை முதலீட்டு இழப்பால் இளைஞா் தற்கொலை
பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்த இளைஞா் பங்குசந்தை முதலீட்டு இழப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்த இளைஞா் பங்குசந்தை முதலீட்டு இழப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பல்லடம் சித்தம்பலத்தைச் சோ்ந்த சிவசுப்பிரமணி மகன் காா்த்திக் (23). இவா் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இவா் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்து தொகையை இழந்ததால் தந்தை சிவசுப்பிரமணி காா்த்திக்கை கண்டித்துள்ளாா் எனக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காா்த்திக் மின் விசிறியில் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.