முகப்பு
திருப்பூர்

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்: அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் செயலா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கோமாரி நோய் கால்நடைகளைத் தாக்கும் கொடிய தொற்று நோய் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தொற்று பரவலாக உள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. மழைக் காலத்தில் இந்த நோய் எளிதாகப் பரவும். காற்றிலும் கூட இந்நோய் பரவும். எனவே, அரசு கால்நடை சந்தைகளைக் கண்காணிக்க வேண்டும். விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்குக் கொண்டு செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

இந்த நோய் கால்நடைகளுக்கு பரவாமல் தடுக்க கால்நடைத் துறை போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →