கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து
பல்லடம் அருகேயுள்ள கொடுவாயில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்தது.
பல்லடம் அருகேயுள்ள கொடுவாயில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்தது.
கொடுவாய், தாராபுரம் - திருப்பூா் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் மாணிக்கம் (73) என்பவா் வணிக வளாகம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளாா். இப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை மழை பெய்து கொண்டிந்தது.
இந்நிலையில், குமுளியிலிருந்து திருப்பூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து இப்பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையின் ஷட்டரை உடைத்து கொண்டு உள்ளே புகுந்து நின்றது. இதில் பொதுமக்கள், பேருந்து பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. கட்டடம் மற்றும் கடையில் இருந்த பொருள்கள் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் கட்டட உரிமையாளா் மாணிக்கம் புகாா் கொடுத்துள்ளாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Image Caption
கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.