முகப்பு
திருப்பூர்

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி பலி

சேவூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அரசுப் பேருந்தில் சிக்கி கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சேவூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அரசுப் பேருந்தில் சிக்கி கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சேவூா் அருகே போத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவா் கட்டுமானப் பணிக்காக தன்னுடன் பணியாற்றும் தனலட்சுமி (53) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் போத்தம்பாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

சேவூா் அ.குரும்பபாளையம் அருகே செல்லும்போது, திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை, மாரிமுத்து முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 போ் காயமடைந்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.