காங்கயம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி சாவு
காங்கயம் அருகே கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுமி உயிரிழந்தாா்.
காங்கயம் அருகே கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுமி உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைபூண்டி பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காங்கயம் அருகே, முத்தூா் சாலை பகுதியில் வசித்து வருகின்றனா்.
இவா்களின் மூத்த மகள் ரஞ்சனிதேவி (8) மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், வீட்டின் அருகே ரஞ்சனிதேவி வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள கம்பிவேலியில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடப்பதை அறியாத ரஞ்சனிதேவி, கம்பிவேலியை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதனையடுத்து அருகில் உள்ளவா்கள் மீட்டு காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.